த்ரிவிக்கிரமன்

Friday, November 19, 2004

சரசுவதியை உயிர்ப்பிப்போம்என்ன இது சரசுவதியை உயிர்ப்பிப்பதா என்ற கேள்வி எழுகிறதா? நமது நாட்டில் தற்பொழுது ஓடும் ஆறுகளை விட தொண்மையானதும் தெய்வீகமானதுமான சரசுவதியை தான் உயிர்ப்பிக்க சொல்கிறேன். எங்கே ஓடுகிறது சரசுவதி என்று கேட்கலாம்..........அழிந்துவிட்டது முற்றிலுமாக.......ஆனால் அந்த ஆற்றினை பற்றி பல குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. அம்பிதாம்பே நதிதாம்பே தேவிதாம்பே சரசுவதி - இருக்கும் தாய்க்கு எல்லாம் மேலானவளே... நதிகளுக்கெல்லாம் மேலானவளே... இருக்கும் தேவதைகளுக்கெல்லாம் மேலானவளே....சரசுவதியே.....கங்கேச யமுனே ச்சைவ கோதாவரி சரசுவதி நர்மதே சிந்து காவேரி ஜலச்மின் சன்னிதிம் க்குருஇந்தப் பாடலில் எல்லா ஜீவ நதியும் பாய்கின்றது சரசுவதியைத் தவிர.......என்ன இது வியப்பேற்படுகிறதா? ஆம் சரசுவதி நதி சுமார் 5000 வருடங்களுக்கு முன் நமது பாரத கண்டத்திலே பாய்ந்துள்ளது. அதுவும் பத்ரிநாத்திற்கு அருகே தோன்றி ராஜதானின் தார் பாலைவனத்திலெல்லாம் பாய்ந்து கட்ச் வளைகுடா வரை பாய்ந்தது என்று நமது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேதங்களிலும் புராணங்களிலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. 1998 ஆம் ஆண்டு இந்தியன் ரிமோட் சென்சிங் சாட்டிலைட் மூலமாக நமது ஆராய்ச்சியாளர்கள் இந்த சரசுவதி நதியினை கண்டறிந்தனர், மேலும் இந்த நதி சுமார் 1600 கி.மீ பாய்ந்துள்ளது என்பது மிகவும் வியப்பானதாகும். டாக்டர் S.கல்யாணராமன் என்ற தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி இதனை கண்டறிந்துள்ளார். பாரதயுத்தம் நடந்தது இந்நதியின் கரையில்தான், கண்ணன் துவாரகா என்ற ஒரு பெரும் ஊரை உருவாக்கியதும் இந்நதி கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில்தான். ஆக கண்ணன் மற்றும் அவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் உண்மையில் நடைபெற்றதாக இருக்கவேண்டும். வேதங்கள் மற்றும் புராணங்கள் கூறுபவை வெறும் கற்பனை என்று விட்டுவிடக்கூடாது.... அதனை நீண்டதொரு ஆராய்ச்சி செய்யவேண்டும். அதில் இருக்கும் உண்மைகளை கண்டறிவது நமது தலையாய கடமையாகும். நமது பாரம்பரியம் இந்த உலகத்திற்கு எடுத்துச்சொல்வது ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்றியமையாதது. இந்த சரசுவதி நதி சுமார் 1500 ஆண்டுகள் கிறிது பிறப்பதற்கு முன்னரே வறண்டுவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் ராஜதானில் பாலைவனத்தில் ஒரு ஆழ்துளை அதாவது 60 மீட்டர் ஆழத்திற்கு இட்டு அதிலிருந்து தண்ணீரை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அந்த நீர் சுமார் 3000 வருடங்களுக்கு மேல் அந்த இடத்திலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாம் என்ன செய்யவேண்டும் மீண்டும் அந்த நதியை உயிர்ப்பிக்கவேண்டும், பாலைவனத்தை சோலைவனமாக்கவேண்டும். முடியும் முயற்சி செய்தால் அதற்கு இந்த அரசும் ஒத்துழைத்தால்...........நிச்சயம் சரசுவதி உயிர்த்தெழும்..........காத்திருப்போம்.

0 Comments:

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது