வேதங்கள் நான்கு வகை
நமது இந்திய நாட்டின் பண்பாடினை நாம் நமக்கிருக்கும் பெருஞ்செல்வமான வேதங்கள் மூலம் அறியலாம். வேதங்கள் நான்கு வகை, ரிக், யசூர், சாம, அதர்வணம். இதில் ரிக் வேதம்தான் முதலில் வந்தது என்பாரும் உண்டு, மற்ற வேதங்களிலும் ரிக் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ஆகவே எது முதல் என்று நாம் கணக்கிடமுடியாது. இந்த வேதங்கள் அனைத்தும் ஒலி வடிவினதாகவே இருக்கிறது. சத்தம் (VIBRATIONS) நம்முள் உள் தோன்றி சப்தமாக வரும்போது பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதில் ரிக் வேதம், முழுக்க என்று கூட கூறலாம், அக்னியைப் பற்றியே குறிப்புகள் வருகிறது. இந்த ரிக்கில் (ரிக் என்றால் மந்திரம்) மொத்தம் 10170 மந்திரங்கள் உள்ளன. இவை அனைத்துமே நம்முள் இருக்கும் ஆத்மா (அக்னி) அதன் பிறப்புப் பற்றியும் அதன் மறுபிறப்பைப்பற்றியும் தெரிவிக்கிறது. இவையெல்லாம் ஒரே நாளில் எழுதப்பட்டவையல்ல நன்கு ஆராய்ச்சி செய்து அவற்றை பிரயோகித்துப் பார்த்து பின்னரே பல்வேறு முனிவர்களால் பலவேறு சமயங்களில் சொல்லப்பட்டவை. நாம் பிறக்கும்போதும் இறக்கும்போதும் என்ன செய்யவேண்டும், அப்படி செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் வேதங்கள் சொல்கிறது. தொடர்ந்து பார்ப்போம்..........
1 Comments:
At 8:23 AM, Koman Sri Balaji said…
THANKS READ CONTINUOUSLY
Post a Comment
<< Home