வேதங்கள் எப்பொழுது தோன்றின?
வேதங்கள் எப்பொழுது தோன்றின? நம் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன பார்ப்போமா? ஒரு சிலர் வேதங்கள் கி.மு. 1500 வருடங்களில் தோன்றியது என்பர், ஒருசிலர் கி.மு.3000 வருடங்களில் தோன்றியது என்பர். ஆனால் காஞ்சி பெரியவர் கூறுவதை சற்று பார்ப்போம், வேதங்களை நம்மால் கணக்கிடமுடியாது அவை பரமாத்மாவிடமிருந்தே தோன்றியது. உபநிசத்தில் ஒரு சூக்தத்தில் காணப்படும் கிரஹநிலைகளை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தோமாயின் வேதங்கள் கி.மு. 6000 வருடங்களுக்கு முன்னரே தோன்றியது. ஆனால் அதேபோன்று கிரகநிலைகள் ஏன் முன்னரே ஏற்பட்டிருக்கக்கூடாது, ஆகையால் நாம் வேதங்களின் காலக்கணக்கை கண்டறிவது என்பது இயலாதஒன்று, இது உண்மைதான் வேதங்கள் பரமாத்மாவின் மூச்சுக்காற்றிலிருந்தே தோன்றியது என்றும் அவை அனைத்தும் சப்தங்களாகவே இருந்தன என்றும் அவற்றை முனிவர்கள் கடும் தவத்தால் நீண்ட வேட்கையின் பிறகே கிடைத்தன என்றும் அவையே வேதங்கள் என்றும் உபநிடதங்களில் சான்றுகள் உள்ளன. அப்படியாயின் பரமாத்மாவின் மூச்சில் இருந்த வந்த வேதங்கள் எவ்வளவு காலம் அண்டங்களில் நிரவியிருந்தது என்றும் முனிவர்களின் கடும் தவம் எவ்வளவுகாலம் இருந்தது என்றும் கணக்கிடமுடியாது. ஆகவே வேதங்களின் காலத்தை நம்மால் கணக்கிடமுடியாது..................தொடர்ந்து பார்ப்போம்........
0 Comments:
Post a Comment
<< Home