த்ரிவிக்கிரமன்

Sunday, December 19, 2004

ஒரு தந்தையும் மகளும் உரையாடுவது போல்..................
மகள் : அப்பா நீங்கள் வேதங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இப்போ நக்கீரன்ல வர்ர
கட்டுரையை படித்தபின்னர் எனக்கு ஆவலாக உள்ளது. எனக்கு சற்று கூறுங்களேன்..........
தந்தை : மகளே உனக்கு சரியான பருவம் வந்தபிறகு சொல்லலாமென்றிருந்தேன் நீயோ
கேட்டுவிட்டாய் சொல்கிறேன் கேள்...........நமது இந்துமதம் தர்மத்தையே பிரதானமாக கொண்டது. ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் எப்படி கூடாது என்பதையெல்லாம் நமது புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்போமாயின் நமக்கு நிச்சயமாக எங்கும் நிறைந்திருக்கும் பரமேஸ்வரனை உணரலாம்.இந்த இந்து என்கிற வார்த்தையே ஈரானியர்களின் படையெடுப்பிற்கு பிறகுதான் வந்தது. அவர்களுக்கு உச்சரிப்புத்தன்மை சற்றேக்குறைவு. அந்த ஈரானியர்கள் நம்மீது படையெடுத்து வரும்போது சிந்து நதியைக் கடக்கவேண்டியிருந்தது. அப்படியும் அவர்கள் கடந்து வந்தபின் அங்கு ஒரு சீரிய நாகரீகத்துடன் காணப்பட்ட மக்களைப் பார்த்தார்கள், அவர்களுக்கு அந்த ஈரானியர்கள் வைத்த பெயர்தான் இந்து. சிந்துவாசிகள் என்பது அவர்கள் வாயினின்று 'இந்து' என்றாயிற்று. இதேதான் பின்னாளில் இந்துஸ்தான் என்றும் இந்தியா என்றும் ஆகிற்று.இந்த பிரபஞ்சம் படைக்கும் போதே வேதங்களும் படைக்கப்பட்டுவிட்டன. அவை பரமேஸ்வரனின் மூச்சுக்காற்றாகும். இந்த வேதங்கள் ஒலியை மையமாகக் கொண்டேயிருக்கின்றன. ஸ்ருதியென்றும் வேதங்களை அழைப்பர்.
மகள் : அப்பா ஒரு சந்தேகம் இந்த பிரபஞ்சத்தை படைத்தது பிரம்மாவென்றும் கூறப்படுகிறதே அப்போ அவருடைய மூச்சுக்காற்றுதான் வேதங்களா.............
தந்தை : இல்லை மகளே..... பரமேஸ்வரன் என்பவன் எல்லோருக்கும் மேலானவன். அவனால்
உருவாக்கப்பட்டவர்களே பிரம்மா சிவன் மற்றும் நாராயணன். பின்னாட்களிலே வந்த புராணங்கள் சிவனையும் நாராயணனையும் மையபடுத்திவிட்டன..........அந்த பரமேஸ்வனின் மூச்சிலிருந்து வந்த வேதங்களை வைத்தே பிரம்மா இந்த பிரபஞ்சத்தை
படைத்தான். இதற்கான ஆதாரங்கள் எல்லாம் வேதங்களிலிருக்கிறது.
மகள் : அப்பா ஒரு சந்தேகம். இந்த வேதங்களை வைத்துதான் பிரம்மன் படைத்தானென்றால்
அதே வேதங்களை வைத்து நம்மாலும் பிரபஞசங்களை படைக்கமுடியுமா?
தந்தை : முடியும் நம்மாலும் முடியும் ஆனால் அதற்கு முன்னர் நாம் மிகவும்
தூய்மையானவர்களாக அந்த வேதங்களில் சொல்கின்ற வாழ்க்கையை வாழவேண்டும்.........
மகள் : வேதங்கள் ஒலிவடிவானது என்றீர்களே. ஆனால் நமக்குபுத்தகமாகவல்லவாயிருக்கிறது.?
தந்தை : ஆரம்பத்தில் ஏன் இப்பொழுதும் கூட பல்வேறுபட்ட வேதங்கள் இந்த பிரபஞ்சத்திலே
உலவிக் கொண்டிருக்கின்றன..... அவற்றை அடைய அவற்றை கேட்க நமக்கு தெய்வீக் காதுகள் வேண்டும்.............
மகள் : தெய்வீகக் காதுகளா? அப்படியென்றால்........
தந்தை : ஆம் எங்கும் பரவியிருக்கும் அந்த மந்த்ர ஒலிகள் நம் காதிற்குள்ளும் போய்தான்
வருகிறது........... அதை உணர்வதற்கு இப்பொழுது டி.வி.யிருக்கிறது அதில் ஒரு நிகழ்ச்சியை ஒரு பாடலை பார்த்துக்கொண்டிருக்கிறாய்..........அந்தப் பாடல் அந்த டி.விக்குள்ளேயே நடந்துக் கொண்டிருக்கிறது? அது என்றோ படமாக்கப்பட்ட காட்சியை எங்கோ ஒரு இடத்திலிருந்து
ஒளிபரப்பி நமக்கு அதை காட்சி வடிவமாக மாற்றித்தர ஒரு சாதனம் தானே இந்த டி.வி.
இல்லையா.....அந்த டி.வி.சிக்னல் நம்மை கடந்தும்தான் செல்கிறது............ஆனால் நம்மால் அந்தக் காட்சியை உணரமுடிகிறதா? இல்லையே இதுபோன்றுதான் ஆதிகாலத்தில் முனிவர்கள் கடுந்தவம் செய்து திடீரென்று தன்னுள் ஒலித்த ஒலியை வார்த்தைகளாக்கினார்கள்........ அவையே மந்த்ரமென்றும் வேதங்கள் என்றும் கூறுகின்றோம்.
மகள் : ஏன் இந்தகாலத்தில் இதுபோன்ற முனிவர்கள் இல்லை? வேதங்களை
படைக்கவில்லை........?
தந்தை : மகளே இப்பொழுது நடைபெற்றிருக்கும் யுகம் கலியுகம்..... ஆரம்பத்தில் வேதங்கள் ஒரே தொகுப்பாகத்தான் இருந்தது. இப்பொழுது இருப்பதுபோல் ரிக் - யஜீர் - சாம - அதர்வணம்
என்றெல்லாம் கிடையாது. கலியுகத்தில் இருக்கும் மக்களுக்கு வலிமை, புத்திக்கூர்மை, ஆயுள்
போன்றவை கம்மி அவர்களால் முழுவதுமாக புரிந்து கொள்ளமுடியாது என்ற எண்ணம்
கொண்டே வியாசர் இந்த வேதங்களை பிரித்துத் தொகுத்தார். அதோடு மட்டுமில்லாமல் தனது சீடர்களாகிய சுமந்து, வைசம்பாயனர்,ஜைமினி,பைவர் என்பவர்களுக்குக் கற்றுக் கொடுத்து
பரம்பரை பரம்பரையாக விருத்தி செய்ய ஏற்பாடு செய்தார்.
மகள் : அப்படி நீங்கள் கூறுவதுபோல் ஆரம்பத்திலிருந்து வியாசர் தொகுக்கும்வரை ஒன்றாக
இருந்த வேதங்களில் ஏன் சிலபல மந்த்ரங்கள் விட்டிருக்கக்கூடாது?
தந்தை : ஆம் நீ சொல்வது சரிதான் வியாசர் வேதங்களை தொகுக்கும் பொழுது எவையெல்லாம் பிரயோகிக்கப்பட்டிருந்ததோ அவற்றை தொகுத்திருக்கலாம்..... அதான் நான் முன்னமே இன்னமும் இந்த வேதங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன் நம்மால் அவற்றை அடையமுடியவில்லை. சரிபோகட்டும் தொகுத்தவற்றை காக்கிறோமா என்றால் அதையும் செய்யாதிருக்கிறோம்.
மகள் : அப்பா ஒரு சந்தேகம் வேதங்கள் எந்த மொழியில் இருக்கிறது?
தந்தை : அவற்றிற்கு மொழி கிடையாது அவை ஒலி வடிவினுடையது............நாம் அவற்றை
வார்த்தைகளாக்க அப்பொழுதுயிருந்த மொழியான சமஸ்கிருதத்தை பயன்படுத்துகிறோம்.
மகள் : அந்த சமஸ்கிருதம் இப்பொழுதுயிருக்கிறதா?
தந்தை : நாம் இழந்துவிட்டோமென்றே சொல்லலாம்..........இப்பொழுது நமது தாய்மொழியாக
தமிழிருக்கிறது.........அதுவும் தூய்மையானதாகவாயிருக்கிறது.............நம் கண்ணெதிரில் இப்படி
அழிந்து கொண்டிருக்கும் தமிழையையாவது காப்போம்...............
மகள் : கண்டிப்பாக அப்பா........ நமது இரு மொழிகள் என்றே நாம் சொல்லலாம்...........
தந்தை : உனக்கு ஹோம் ஒர்க் இருக்கு இல்ல அதை முடிச்சிட்டுவா பிறகு பேசுவோம் என்ன?மகள் : சரியப்பா நம்முடைய பூர்வீகம் பற்றி இப்பொழுதுதான் அறிகிறேன் எவ்வளவு
தூய்மையானது நம் பூர்வீகம்.........
உரையாடல் தற்சமயம் முடிந்தது............

0 Comments:

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது