த்ரிவிக்கிரமன்

Monday, February 07, 2005

மகள்: அப்பா உபநிஷத் என்றால் என்ன? அவை ஏன் உருவாக்கப்பட்டது. அந்த உபநிஷத் கூறும் வழிமுறைதான் என்ன?
தந்தை: உபநிஷத்தை பற்றி சொல்வதென்றால் சொல்லிக்கொண்டேயிருக்கலாம் அவ்வளவு உள்ளது இந்த உபநிஷத்தில். உப என்றால் அருகில் என்று பொருள். நி என்றால் நிச்சயம் என்று அர்த்தம்., ஷத் என்றால் களைதல் என்று அர்த்தம். அதாவது மனதில் காணப்படும் துன்பங்களை களைந்து ஆத்மஞானத்தை வளர்ப்பித்தல் என்று அர்த்தமாகும். இதன் முழு அர்த்தம் என்னவென்றால் நீ ஒரு ஆசிரியரிடத்தில் பாடம்
கற்றுக்கொள்கிறாய் என்று வைத்துக்கொள்வோம் அப்படி பாடம் நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரியரிடத்தில் நீ ஒரு சந்தேகம் கேட்டு அதற்கு ஆசிரியர் விளக்கம் தந்து நீ புரிந்து கொண்டாய் எனில் நீ அந்த குறிப்பிட்ட ஞானத்தை அடைகிறாய் அதேபோன்று வேதங்களில் பல புரியாத மந்திரங்கள் இருக்கும் அவற்றை ஒரு குருவிடம் கேட்டு ஞானம் அடையும் சீடனுக்கும் குருவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்தான் உபநிஷத். ஏன் நீ சந்தேகம் கேட்டு நான் விளக்கமளிக்கிறேனே அதுவும் ஒருவகையில்
உபநிஷத் என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் உபநிஷத் தூய்மையானவை அவற்றை கொச்சைப்படுத்தக்கூடாது. வழிமுறையைப் பற்றிக்கேட்டாய், இந்த வாழ்க்கையின் வழிமுறைகளையே உபநிஷத்துக்கள் கூறுகின்றன.

மகள்: அப்பா மொத்தம் எத்தனை உபநிஷத்துகள் இருக்கின்றன? அவற்றில் முக்கியமானவை என்று ஏதேனும் உண்டா?
தந்தை: வேதங்களை தொகுக்கும்பொழுது வியாசர் நான்கு வேதத்திற்கும் மொத்தம் 1180 சாகைகளாக பிரித்தார். சாகை என்பது பிரிவு (Division). ஆனால் இப்பொழுது புழக்கத்தில் இருப்பது 6 சாகைகள்தான் கேட்பதற்கே ஒருமாதிரியாக உள்ளதா?. ரிக் வேதத்திற்கு ஒரே ஒரு சாகைதான், ஐதரேய சாகை. யஜீருக்கு மூன்று சாகைகள் அதாவது காண்வ, தைத்திரீய, மாத்யந்தின சாகை என்று. ஸாம வேதத்தில் கெளதம, தலவகார சாகை என்று இரண்டும் உள்ளது. அதர்வண வேதத்தில் ஒரு சாகைகூட புழக்கத்தில் இல்லை. இந்த சாகைகளுக்குள் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவுகள் உள்ளது. இதில் ஞான காண்டம் எனப்படுவதே உபநிஷத் ஆகும். இந்த உபநிஷத் வேதாந்தம் என்றும் அழைக்கப்படும். இந்த உபநிஷத்துகளில் ஈஸாவாஸ்யம் மற்றும் கடோபநிஷத் மிகவும் சிறப்பானதாகும்.
மகள்: நீங்கள் நிறைய பிரித்து பிர்த்து வாயில் நுழையாதவைகளை கூறுகிறீர்கள்.
தந்தை: நீ கேட்டதனால் நான் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். சரிசரி போதும் உனக்கு இன்னொரு நாள் கதையாக கூறுகிறேன் சரியா?
மகள்: கதையா இப்பொழுதே கூறுங்களேன்.....
தந்தை: நான் சொன்னவற்றை கொஞ்சம் யோசித்துக் கொண்டிரு பிறகு சொல்கிறேன் சரியா.....

3 Comments:

  • At 8:52 AM, Anonymous Anonymous said…

    இதெல்லாம் எதோ வெள்ளைக்காரர்கள் செய்யும்
    ஆராய்ச்சிகளாகிக்கொண்டு வருகிறது வருத்ததிற்குரிய விஷயம்.
    ஆனால் இதெல்லாம் கவலைப்படாமல் சத் விஷயங்களை பதிவு செய்வதே
    நமது கடமை.

    தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ஆதி சங்கரர் எழுதிய உபநிஷத்துக்களின்
    பாஷ்யங்கள் பற்றி சொல்ல முடியுமா..

     
  • At 8:49 AM, Blogger Koman Sri Balaji said…

    நன்றி மாக்ஸ் முல்லர் தான் வேதங்களை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தினார். நீங்கள் கேட்ட மற்றொரு விஷயம், ஆதி சங்கரர் இருக்கிற உபநிஷத்துக்களில் சிறந்த பத்திற்கு மாத்திரம் பாஷ்யம் எழுதியுள்ளார். அதை ஒரு சிறிய ஸ்லோக ரூபமாக சொல்வதுண்டு அந்த ஸ்லோகம்

    ஈச-கேன -கட-ப்ரச்ன -முண்ட-மாண்டூக்ய-தித்திரி|
    ஐதரேயம் ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் தச||

    இந்த பத்திற்கும் பாஷ்யம் எழுதியுள்ளார். முடிந்த அளவிற்கு அவற்றை நாம் இந்த தொடுப்பில் பதிப்பிப்போம்.
    நன்றி வாழ்த்துக்கள். தொடர்ந்து படியுங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.

     
  • At 10:44 AM, Anonymous Anonymous said…

    bad credit mortgage

     

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது