த்ரிவிக்கிரமன்

Monday, December 20, 2004

மகள் : அப்பா மறுபடியும் சந்தேகம்.......
தந்தை : என்ன மறுபடி ஆரம்பித்துவிட்டாயா?
மகள் : அப்பா பிரம்மாவுக்கு எவ்வளவு வயதிருக்கும்?
தந்தை : அதற்கு முன் உனக்கு எத்தனை யுகங்கள் என்பது பற்றி சொல்லவேண்டும். வேதங்களிலும் புராணங்களிலும் மொத்தம் நாண்கு யுகங்கள் காணப்படுகின்றன. அவை க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம்., நாம் இப்போது இருப்பது இந்த கலியுகத்திலே. அதுமட்டும்தானா ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் அவர்களின் வலிமை ஆயுள் எல்லாம் முன்னமே கணக்கிடப்பட்டிருக்கின்றது. சரி இப்பொழுது உன் கேள்விக்கு வருகிறேன்.... பிரம்மாவுக்கு வயது எவ்வளவுயிருக்கும்? ஒரு பேப்பர் பேனா கொண்டுவா கொஞ்சம் கணக்கிடுவோம் சரியா?
மகள் : சரிப்பா பேப்பரில்லாமல் கணக்கிடமுடியாதா?
தந்தை : உன்னால் முடியுமென்றால் சரி.....
மகள் : இல்லை இதோ வருகிறேன்.....
தந்தை : சரி கணக்கு போடு பார்ப்போம். இப்பொழுது நாம் கணக்கிடும் நாள் வருடக் கணக்குத்தான் சரியா?
மகள் : சரிப்பா....
தந்தை : க்ருத யுகம் 1728000 வருடங்களும், த்ரேதாயுகம் 1296000, த்வாபரயுகம் 864000, கலியுகம் 432000 வருடமாகும். இது போன்ற நாண்கு யுகமும் சேர்த்து பிரம்மாவுக்கு ஒர் இரவாகிறது அதே போன்று ஓர் பகலுமாகிறது. ஆக பிரம்மாவுக்கு ஒரு நாள் என்றால் எத்தனை வருடங்கள் சொல்லு பார்க்கலாம்.....
மகள் : ம்....ம்....8640000 வருடங்கள் ஒரு நாள் பிரம்மாவுக்கா?...
தந்தை : ஆம்.....இப்பொழுது பிரம்மாவுக்கு வயது என்ன தெரியுமா 50 வருடமாகிறது.....அப்போ எத்தனை வருடங்களுக்கு முன் பிரம்மா தோன்றியிருப்பார் சொல்லு பார்க்கலாம்........
மகள் : இருப்பா கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்து கணக்கு பார்த்துச் சொல்கிறேன் ......
தந்தை : ம்..... சொல்லு......
மகள் : 157680000000 வருடங்கள்......அம்மாடியோவ்......
தந்தை : அதாவது 15768 கோடி வருடங்கள்.... பிரம்மாவுக்கு இந்த வயதாகின்றது என்றால் அவரை படைத்த பரமேஸ்வரனுக்கு வேண்டாம் விட்டுவிடுவோம் என்கிறாயா?
மகள் : இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா அப்பா?
தந்தை : உண்டு கண்ணா.... நான் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றும் பொழுது சில மந்திரங்கள் சொல்வேன் நீயும் கேட்டிருப்பாய் அதில் சங்கல்பம் என்று ஒன்று உண்டு
...ப்ரவர்த்தமாநஸ்ய ஆ அத்ய ப்ரஹ்மண:
த்விதீயபரார்த்தே ‚ஸ்வேதவராஹ
கல்பேவைவஸ்வதபந்வந்தரே கலியுகே......
என்று கூறுவேன் நீயும் பார்த்திருப்பாய் இதில் பின் வரும் மந்த்ரத்தில் இன்ன மாதம் இன்ன திதி இன்ன நட்சத்திரம் என்றெல்லாம் கூறி சங்கல்பம் செய்வேன் இதிலிருந்துதான் பிரம்மாவுக்கு இத்தனை வருடம் ஆகின்றது என்று கணக்கிட முடிகிறது.
மகள் : அடேங்கப்பா இவ்வளவு சரியாக கணிக்க கூடிய அளவில் வேதங்களில் கணக்கிட முடிகிறதா?
தந்தை : நீ வேறு வேதத்தில் அந்தப் பொழுதில் இருந்த நட்சத்திரங்கள் அதாவது வானத்தில் உள்ள நட்சத்திர அமைப்பை பற்றிய குறிப்புக் காணப்படுகிறது அதை வைத்து பாலகங்காதர திலகர்...
மகள் : திலகரா.... அவர் சுதந்திர போராட்ட வீரரல்லவா....?
தந்தை : ஆம் ஆனால் ஒரு மிகப்பெரிய வேதப்பண்டிதரும் கூட... சரி விசயத்திற்கு வருகிறேன் அவர் அந்த நட்சத்திர அமைப்பினை கணக்கிட்டு சரியாக வேதக்காலத்தை கணக்கிட்டிருக்கிறார் அவர் கணக்கின்படி கி.மு.3000 வேதகாலம் என்று அரிதியிட்டு கூறுவார். ஆனால் நமது காஞ்சி மஹாப் பெரியவர் என்ன சொல்வார் தெரியுமா ஏன் இதுபோன்ற வான் அமைப்பு முன்னர் இருந்திருக்கக்கூடாது ஏன் கி.மு 6000 ஆக இருக்கக்கூடாது என்பார். ஆனால் முன்னமே சொன்னது போன்று வேதங்களின் காலத்தை நம்மால் கணக்கிடமுடியாது......
மகள் : அப்பா எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.....
தந்தை : இதற்கே இப்படியென்றால் இன்னமும் நிறையயிருக்கிறது சரிசரி ரொம்ப நேரமாகிவிட்டது பிறகு ஒரு நாள் பார்க்கலாம்.......

Sunday, December 19, 2004

ஒரு தந்தையும் மகளும் உரையாடுவது போல்..................
மகள் : அப்பா நீங்கள் வேதங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இப்போ நக்கீரன்ல வர்ர
கட்டுரையை படித்தபின்னர் எனக்கு ஆவலாக உள்ளது. எனக்கு சற்று கூறுங்களேன்..........
தந்தை : மகளே உனக்கு சரியான பருவம் வந்தபிறகு சொல்லலாமென்றிருந்தேன் நீயோ
கேட்டுவிட்டாய் சொல்கிறேன் கேள்...........நமது இந்துமதம் தர்மத்தையே பிரதானமாக கொண்டது. ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் எப்படி கூடாது என்பதையெல்லாம் நமது புராணங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்போமாயின் நமக்கு நிச்சயமாக எங்கும் நிறைந்திருக்கும் பரமேஸ்வரனை உணரலாம்.இந்த இந்து என்கிற வார்த்தையே ஈரானியர்களின் படையெடுப்பிற்கு பிறகுதான் வந்தது. அவர்களுக்கு உச்சரிப்புத்தன்மை சற்றேக்குறைவு. அந்த ஈரானியர்கள் நம்மீது படையெடுத்து வரும்போது சிந்து நதியைக் கடக்கவேண்டியிருந்தது. அப்படியும் அவர்கள் கடந்து வந்தபின் அங்கு ஒரு சீரிய நாகரீகத்துடன் காணப்பட்ட மக்களைப் பார்த்தார்கள், அவர்களுக்கு அந்த ஈரானியர்கள் வைத்த பெயர்தான் இந்து. சிந்துவாசிகள் என்பது அவர்கள் வாயினின்று 'இந்து' என்றாயிற்று. இதேதான் பின்னாளில் இந்துஸ்தான் என்றும் இந்தியா என்றும் ஆகிற்று.இந்த பிரபஞ்சம் படைக்கும் போதே வேதங்களும் படைக்கப்பட்டுவிட்டன. அவை பரமேஸ்வரனின் மூச்சுக்காற்றாகும். இந்த வேதங்கள் ஒலியை மையமாகக் கொண்டேயிருக்கின்றன. ஸ்ருதியென்றும் வேதங்களை அழைப்பர்.
மகள் : அப்பா ஒரு சந்தேகம் இந்த பிரபஞ்சத்தை படைத்தது பிரம்மாவென்றும் கூறப்படுகிறதே அப்போ அவருடைய மூச்சுக்காற்றுதான் வேதங்களா.............
தந்தை : இல்லை மகளே..... பரமேஸ்வரன் என்பவன் எல்லோருக்கும் மேலானவன். அவனால்
உருவாக்கப்பட்டவர்களே பிரம்மா சிவன் மற்றும் நாராயணன். பின்னாட்களிலே வந்த புராணங்கள் சிவனையும் நாராயணனையும் மையபடுத்திவிட்டன..........அந்த பரமேஸ்வனின் மூச்சிலிருந்து வந்த வேதங்களை வைத்தே பிரம்மா இந்த பிரபஞ்சத்தை
படைத்தான். இதற்கான ஆதாரங்கள் எல்லாம் வேதங்களிலிருக்கிறது.
மகள் : அப்பா ஒரு சந்தேகம். இந்த வேதங்களை வைத்துதான் பிரம்மன் படைத்தானென்றால்
அதே வேதங்களை வைத்து நம்மாலும் பிரபஞசங்களை படைக்கமுடியுமா?
தந்தை : முடியும் நம்மாலும் முடியும் ஆனால் அதற்கு முன்னர் நாம் மிகவும்
தூய்மையானவர்களாக அந்த வேதங்களில் சொல்கின்ற வாழ்க்கையை வாழவேண்டும்.........
மகள் : வேதங்கள் ஒலிவடிவானது என்றீர்களே. ஆனால் நமக்குபுத்தகமாகவல்லவாயிருக்கிறது.?
தந்தை : ஆரம்பத்தில் ஏன் இப்பொழுதும் கூட பல்வேறுபட்ட வேதங்கள் இந்த பிரபஞ்சத்திலே
உலவிக் கொண்டிருக்கின்றன..... அவற்றை அடைய அவற்றை கேட்க நமக்கு தெய்வீக் காதுகள் வேண்டும்.............
மகள் : தெய்வீகக் காதுகளா? அப்படியென்றால்........
தந்தை : ஆம் எங்கும் பரவியிருக்கும் அந்த மந்த்ர ஒலிகள் நம் காதிற்குள்ளும் போய்தான்
வருகிறது........... அதை உணர்வதற்கு இப்பொழுது டி.வி.யிருக்கிறது அதில் ஒரு நிகழ்ச்சியை ஒரு பாடலை பார்த்துக்கொண்டிருக்கிறாய்..........அந்தப் பாடல் அந்த டி.விக்குள்ளேயே நடந்துக் கொண்டிருக்கிறது? அது என்றோ படமாக்கப்பட்ட காட்சியை எங்கோ ஒரு இடத்திலிருந்து
ஒளிபரப்பி நமக்கு அதை காட்சி வடிவமாக மாற்றித்தர ஒரு சாதனம் தானே இந்த டி.வி.
இல்லையா.....அந்த டி.வி.சிக்னல் நம்மை கடந்தும்தான் செல்கிறது............ஆனால் நம்மால் அந்தக் காட்சியை உணரமுடிகிறதா? இல்லையே இதுபோன்றுதான் ஆதிகாலத்தில் முனிவர்கள் கடுந்தவம் செய்து திடீரென்று தன்னுள் ஒலித்த ஒலியை வார்த்தைகளாக்கினார்கள்........ அவையே மந்த்ரமென்றும் வேதங்கள் என்றும் கூறுகின்றோம்.
மகள் : ஏன் இந்தகாலத்தில் இதுபோன்ற முனிவர்கள் இல்லை? வேதங்களை
படைக்கவில்லை........?
தந்தை : மகளே இப்பொழுது நடைபெற்றிருக்கும் யுகம் கலியுகம்..... ஆரம்பத்தில் வேதங்கள் ஒரே தொகுப்பாகத்தான் இருந்தது. இப்பொழுது இருப்பதுபோல் ரிக் - யஜீர் - சாம - அதர்வணம்
என்றெல்லாம் கிடையாது. கலியுகத்தில் இருக்கும் மக்களுக்கு வலிமை, புத்திக்கூர்மை, ஆயுள்
போன்றவை கம்மி அவர்களால் முழுவதுமாக புரிந்து கொள்ளமுடியாது என்ற எண்ணம்
கொண்டே வியாசர் இந்த வேதங்களை பிரித்துத் தொகுத்தார். அதோடு மட்டுமில்லாமல் தனது சீடர்களாகிய சுமந்து, வைசம்பாயனர்,ஜைமினி,பைவர் என்பவர்களுக்குக் கற்றுக் கொடுத்து
பரம்பரை பரம்பரையாக விருத்தி செய்ய ஏற்பாடு செய்தார்.
மகள் : அப்படி நீங்கள் கூறுவதுபோல் ஆரம்பத்திலிருந்து வியாசர் தொகுக்கும்வரை ஒன்றாக
இருந்த வேதங்களில் ஏன் சிலபல மந்த்ரங்கள் விட்டிருக்கக்கூடாது?
தந்தை : ஆம் நீ சொல்வது சரிதான் வியாசர் வேதங்களை தொகுக்கும் பொழுது எவையெல்லாம் பிரயோகிக்கப்பட்டிருந்ததோ அவற்றை தொகுத்திருக்கலாம்..... அதான் நான் முன்னமே இன்னமும் இந்த வேதங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன் நம்மால் அவற்றை அடையமுடியவில்லை. சரிபோகட்டும் தொகுத்தவற்றை காக்கிறோமா என்றால் அதையும் செய்யாதிருக்கிறோம்.
மகள் : அப்பா ஒரு சந்தேகம் வேதங்கள் எந்த மொழியில் இருக்கிறது?
தந்தை : அவற்றிற்கு மொழி கிடையாது அவை ஒலி வடிவினுடையது............நாம் அவற்றை
வார்த்தைகளாக்க அப்பொழுதுயிருந்த மொழியான சமஸ்கிருதத்தை பயன்படுத்துகிறோம்.
மகள் : அந்த சமஸ்கிருதம் இப்பொழுதுயிருக்கிறதா?
தந்தை : நாம் இழந்துவிட்டோமென்றே சொல்லலாம்..........இப்பொழுது நமது தாய்மொழியாக
தமிழிருக்கிறது.........அதுவும் தூய்மையானதாகவாயிருக்கிறது.............நம் கண்ணெதிரில் இப்படி
அழிந்து கொண்டிருக்கும் தமிழையையாவது காப்போம்...............
மகள் : கண்டிப்பாக அப்பா........ நமது இரு மொழிகள் என்றே நாம் சொல்லலாம்...........
தந்தை : உனக்கு ஹோம் ஒர்க் இருக்கு இல்ல அதை முடிச்சிட்டுவா பிறகு பேசுவோம் என்ன?மகள் : சரியப்பா நம்முடைய பூர்வீகம் பற்றி இப்பொழுதுதான் அறிகிறேன் எவ்வளவு
தூய்மையானது நம் பூர்வீகம்.........
உரையாடல் தற்சமயம் முடிந்தது............

Friday, December 10, 2004

வேதங்களை தொகுத்தவர் வியாசர். இவரை வேத வியாசர் என்றும் அழைப்பர். இவர் பல இடங்களிலும் பல ரூபங்களிலும் இருந்த வேதங்களையும் உபநிடதங்களையும் பகுதிவாரியாக பிரித்தார். இவரேதான் மகாபாரதத்தையும் பாகவதத்தையும் படைத்தவர். மகாபாரத்தில் இடைச்செறுகல் என்று அறியோதார் கூறும் பகவான் கண்ணன் அருளியதாக வரும் கீதையையும் படைத்தவர் இவரே. உண்மையில் வேதங்கள் மட்டுமல்ல கீதையும் ஒரு மனிதன் எவ்வாறு இருக்கவேண்டும் அவனின் பணிகள் என்னவென்று தெளிவாகக் கூறும். இந்த வியாசரைப் பற்றி பலவேறு கதைகள் கூறப்பட்டாலும் நதிமூலம் ரிசிமூலம் பார்க்ககூடாது என்பார்கள், அவர்கள் நமக்கு சொல்லியவற்றை நாம் சரியாகச் செய்தோமாவென்றே பார்க்கவேண்டும். வேதத்தில் நிறைய இடங்களில் சிந்து என்கின்ற வார்த்தை வருகின்றது...........இது பற்றிய குறிப்புகளை அடுத்துப் பார்ப்போம்..............

Tuesday, December 07, 2004

நம்முடைய நாட்டில் அரசுபுரிந்த மொகலாய சக்கரவர்தியான ஸாஜகானுடைய மூத்த குமாரனும் ஹவுரங்கசீப்பின் அண்ணனுமான தாராசூகோ என்ற புகழ்பெற்ற ஞானி, கி்பி. 1657 ஆம் ஆண்டில் பல பண்டிதர்களைக்கொண்டு 50 முக்கியமான உபநிஸதங்களை பார்ஸி மொழியில் மொழிபெயர்த்தான். இதனை வைத்தே ஐரோப்பியர்கள் கி.பி. 1801 ல் லத்தீனில் முதன்முதலாக மொழிபெயர்த்து அவற்றின் அருமைபெருமைகளை உலகெங்கும் எடுத்துரைத்தனர். இவ்வாறு நமது பாரம்பரிய புகழ் பரவுவதற்கு காரணமாக இருந்தவர் ஒரு முஸ்லீம். அவருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். நமது ஹிந்து மத தர்மப் பிரமானங்களில் முக்கியமானது வேதங்களும் உபநிஸதமும் தான். இந்த உபநிடதங்களில் ஒரு குருவும் சீடனும் உரையாடல் செய்கின்றார்போலவே முழுவதும் காணப்படும். மனதை சுத்தமாக வைத்துக்கொண்டு மெய்ப்பொருளில் உண்மையாக பற்று வைத்திருப்பவர்களுக்கு ஒரு தீணியாகவே இந்த உபநிடதங்களை சொல்லலாம்.....இவற்றில் சில இடங்கள் புரிவதற்கு கடிணமாகவேயிருக்கும்..................ஒரு சிறந்த குருவைக் கொண்டே படிக்கமுடியும்..........ஒரு நாவலோ சிறுகதையோ படிக்கிறார்போல் இந்த உபநிடதங்களை படிக்கமுடியாது..........மொத்தம் ஆயிரத்து சொச்சம் உபநிடதங்கள் இருந்ததாகவும் கூறுவர். வேதங்களில் அடுத்த கட்டம் என்றே கூட உபநிடதங்களை கூறலாம்..........தொடர்ந்து பார்ப்போம்..............

Wednesday, December 01, 2004

வேதங்களில் பல சிறிய கதைகள் உள்ளன. வேதங்கள் மொத்தமே இவ்வளவுதானா என்று நமக்குத் தோன்றிய எண்ணம் ஒரு சமயம் பரத்வாஜ மகரிசிக்குத் தோன்றியது, அவர் கடும்தவம் செய்தாராம் அதுவும் அவரின் மூன்று ஆயுஸ் காலத்திற்கும் மேலாக முழு வேதங்களையும் அடைய வேண்டும் கற்றறிய வேண்டும் என்று பிரத்தனப்பட்டாராம். பின்னர் ஒருநாள் பகவான் அவர் முன் தோன்றி மலைகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச்சென்றாராம், அங்கு ஒரு கைபிடி மண்ணை எடுத்துக்கொண்டு பரத்வாஜரிடம் நீவீர் கற்றது இந்த கையிலிருக்கும் மண் அளவிற்குதான் நீங்கள் கற்காத வேதங்கள் இந்த மலைகளைப் போன்று உள்ளது அதற்கு நீவீர் எத்தனை கடும்தவம் செய்தாலும் முடியாது என்றாராம். இந்தக் கதை எதற்கு என்றால் நம்மிடம் கிடைத்துள்ள வேதங்கள் ஒரு சிறிய அளவுதான் இதுபோன்று வேதங்கள் அண்டசராசரம் எல்லாம் வியாபித்திருக்கும் நம் கடும்தவத்திற்கு பிறகுதான் அவை கிடைக்கப்பெறும்..........இந்தக்காலத்தில் அவையெல்லாம் சாத்தியமா...........எல்லாமே சப்தங்கள் தான் வேதங்கள் தான் நம் அனைவரின் மூச்சிலும் ஸ்வாசத்திலும் நாடிதுடிப்பிலும் வேதங்கள் நிரவியிருக்கிறது................தொடர்ந்து பார்ப்போம்.................
 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது