த்ரிவிக்கிரமன்

Saturday, February 12, 2005

திரு Srikanth, உங்களின் கேள்வி நியாயமானதே. வேதங்களைப் பற்றி எழுதும் முன் பல்வேறு புத்தககங்களை படித்துப் பின்னர்தான் எழுதவே ஆரம்பித்தேன். முதலில் எடுத்துக்கொண்ட புத்தகம் ராஜாஜியுடையது பிறகு காஞ்சி மகாப் பெரியவரின் புத்தகங்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறுவதைவிட இதோ.......
அப்போது வேத வியாஸருக்கு அந்தப் பேர் இருக்கவில்லை. அவருடைய (இயற்) பெயரும் கிருஷ்ணர் என்பதுதான். தீவில் (த்வீபத்தில்) பிறந்தவராதலால் த்வைபாயனர் என்பார்கள். கிருஷ்ண த்வைபாயனர், பாதராயணர் என்ற பேர்கள் அவருக்கு இருந்தன. 'பதரி'என்னும் இலந்தை மரத்தடியில் தபஸ் பண்ணியதால் பாதராயணர் என்றும் அவரைச் சொல்வார்கள். பல மஹரிஷிகளின் மூலமாக லோகத்துக்கு வந்திருந்த 1180 வேத சாகைகளும் கிருஷ்ண த்வைபாயனருக்குத் தெரியும். அக்காலத்தில் அதெல்லாம் கலந்து ஒரே பிரவாஹமாகத்தான் இருந்தது. அதில் நிறைய கிரஹிக்கும் சக்தி பூர்விகர்களுக்கு இருந்தது. அவதார புருஷரானதால் த்வாபரக் கடைசியில் பிறந்த போதிலும் கிருஷ்ண த்வைபாயனருக்கே அத்தனையையும் க்ரஹிக்கும் சக்தி குறைந்த நமக்காக அவர் அவற்றை
நாலு வேதங்களாகவும், அதில் ஒவ்வொன்றிலும் இன்னின்ன சாகை என்றும் பிரித்தார். ஒரு DAM போட்டுப் பெரிய பிரவாஹத்திலிருந்து பல வாய்க்கால் வெட்டி விடுகிற மாதிரி நாலு வேதங்கள், அவற்றின் சாகைகள் என்று விபாகம் (பகுப்பு) செய்தார். அது அவருடைய யோக மகிமை, தபஸின் வலிமை. இவற்றில் பிரார்த்தனா ரூபமான ரிக்வேத சாகைகள், யக்ஞ விதிகளின் ரூபமான யஜுஸ் சாகைகள், கான ரூபமான ஸாமவேத சாகைகள், ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்ருக்களை நாசம் பண்ணுவதற்குமான மந்திரங்களையும் யக்ஞங்களையும் முக்யமாகக் கொண்ட அதர்வ சாகைகள் எல்லாம் இருந்தன.
தேவர்கள் ரொம்பவும் ஸந்தோஷப்படுத்துவதற்காக ஸாமவேதத்தில் அதிகப்படியான சாகைகள் இருந்தன 1180ல் ஆயிரம் சாகைகள் ஸாமவேதத்திலேயே இருந்தனவாம். ரிக் வேதத்தில் 21 சாகைகள் இருந்தன. யஜுர் வேதத்தில் 109 இருந்தன. (சுக்ல யஜுஸில் 15;
கிருஷ்ணயஜுஸில் 94) அதர்வ வேதத்தில் 21 சாகைகள்இருந்தன. 1180 என்பது விஷ்ணுபுராணத்தில் வருவதாக ஒரு பண்டிதர் எடுத்துக் காட்டிய கணக்காகும். இதற்குக் கொஞ்சம் வித்யாஸமாக இன்னொரு கணக்கும் இருக்கிறது. அதன்படி ரிக் வேதத்தில் 21 சாகைகள்;யஜுஸில் 101;ஸாமத்தில் 1000;அதர்வத்தில் 11; மொத்தம் 1133 சாகைகள்.
இனிமேல் வரப்போதும் கலிகால ஜனங்கள் அல்ப சக்தர்களாகவே இருப்பார்களாதலால் இந்த ஆயிரத்து நூற்றுச் சொச்சத்தில் ஒரு சாகையை அத்யயனமும் அநுஷ்டானமும் பண்ணினால் போதும் என்று கிருஷ்ண த்வைபாயனர் கருதினர். பகவத் ஸங்கல்பமே அவருக்கு இந்த
எண்ணத்தைத் தந்தது. அதனால் ஒருத்தரே பல வேதங்களைக் கற்றுக்கொள்கிற பழைய முறைபோய், ரிக், யஜுஸ், ஸாம, அதர்வங்களில் ஏதாவது ஒன்றிலே ஒரு சாகையைப் படித்து மனப்பாடம் பண்ணி, அதன்படி செய்தால் போதும் என்ற புது ஏற்பாட்டைச் செய்தார். தம்
சிஷ்யர்கள் நாலு பேரில் ஒவ்வொருவரிடம் ஒரு வேதம் என்று பிரித்துக் கொடுத்து, 'இதன் சாகைகளை நீங்கள் பிரசாரம் செய்யுங்கள்'என்று ஆக்ஞை பண்ணினார். ரிக்வேத சாகைகளைப் பைலர் என்ற சிஷ்யரிடமும், இப்படியே யஜுஸை வைசம்பாயனரிடமும், ஸாமத்தை
ஜைமினியிடமும், அதர்வத்தை சுமந்து என்பவரிடமும் கொடுத்துப் பிரசாரம் செய்ய வைத்தார்.
இப்படி ஒரு ஜீவனுக்கு இது போதும் என்று வேதத்தை நாலாகவும், அந்த நாலை 1180 சாகைகளாகவும் பிரித்துக் கொடுத்ததாலேயே, கிருஷ்ண த்வைபாயனருக்கு 'வேத வ்யாஸர்'என்ற காரணப்பெயர் உண்டாயிற்று. வ்யாஸம் என்றால் கட்டுரை, ESSAY, COMPOSITION என்று அர்த்தம். ஒரு விஷயத்தை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு விளக்குவதால் அதற்கு வியாஸம் என்று பெயர் வந்தது. பல விஷயங்கள் இருக்கிறபோது,
ஒவ்வொரு பொருள் பற்றியும் (SUBJECT WISE-ஆக) விபாகம் பண்ணுவது (பிரித்து CLASSIFY பண்ணுவது) தான் வியாஸம். ஏகப்பட்டதாக இருந்து வந்த வேதசாகைகளைத் தீர்மானமாக இது போதும் என்று பிரித்து விபாகம் செய்ததாலேயே, க்ருஷ்ண த்வைபாயனருக்கு வேத வ்யாஸர் என்ற பெயர் வந்துவிட்டது.


மேற்கண்டவை நம்முடன் வாழ்ந்த மகான் காஞ்சி மகாப்பெரியவர் அவர்களின் கருத்து. இதே கருத்தினைத்தான் நம் மகான்கள் பலரும் தெரிவிக்கின்றன்ர். இவற்றைப் பற்றிய குறிப்பு இல்லாமல் அவ்வாறு தெரிவிக்கமாட்டார்கள். ஏன் இராமாயணம் மட்டுமல்ல ஏன் பகவத்கீதையிலும் கிருஷ்ணன் ஒன்பதாம் அத்தியாயத்தில்

பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ
வேதயாம் பவித்ரம் ஓம்கார ரிக் சாம யஜீர் ஏவச

வேதங்களில் நான் ரிக், யஜீஸ், சாமம் என்று கிருஷ்ணரே கூறியிருப்பதாலும் வேதங்களின் பிரிவுகளைப் பற்றி சந்தேகம் வரலாமே.....நல்லது இதுபோன்று தங்களின் கருத்துக்களை அடிக்கடி தெரிவியுங்கள்.

1 Comments:

  • At 9:04 PM, Blogger Srikanth said…

    நன்றி த்ரிவிக்ரமன்...

    நிறைய விளக்கமா சொல்லியிருக்கீங்க... இந்த விஷயங்களை புரிஞ்சுக்கறதுக்கே சக்தி வேணும்.. அதை மற்றவர்களுக்கு
    சொல்லணும்னா அதுக்கு தெய்வ சங்கல்பமும் வேணும்னு நினைக்கறேன். நிறைய எழுதுங்கள்.

    அன்புடன்
    ஸ்ரீகாந்த்

     

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது