த்ரிவிக்கிரமன்

Friday, February 25, 2005

சாதி அமைப்புகள் - சிறு விளக்கம்

சாதி அமைப்பினை கண்ணன் "ஸாதுர் வர்ண்யம் மயாசிருஷ்டம்" என்று கூறி தான் படைத்ததாகவும், அவை எவ்வாறு பிரிக்கப்பட்டன என்பதை 18-ம் அத்தியாயமாம் மோஷ சன்னியாச யோகம் என்னும் அத்தியாயத்தில் பிராம்மனன் எத்தகைய தொழில் செய்வான் சத்ரியன் என்ன தொழில் செய்வான் வைசியன் என்ன தொழில் செய்வான் சூத்திரன் என்னனென்ன தொழில் செய்யவேண்டும், என்பதை விவரித்து இந்த
நான்வகை வருணங்களும் அவரவர் செய்யும் தொழில்களினால்தான் பிரிக்கவேண்டும் பிறப்பால் அன்று என்று தெளிவுபற கூறியுள்ளான். இதை ஏற்கனவே ஒருஅளவுக்கு அலசியாயிற்று. சரி கீதையில் கண்ணன் கூறிய வர்ணமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏதாவது மாற்று கருத்துக்கள் அந்த காலத்தில் இருந்ததா என்றால் நானறிந்த வரையில் இல்லை என்றே கூறுவேன். ஏனென்றால் அப்பொழுது இந்த வர்ணமுறைகளை வைத்து அவ்வளவாக சாதி பிரச்சினைகள் வரவில்லை. விசுவாமித்திர மஹரிஷியை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் பிறப்பால் ஒரு சத்ரியன் ஆனால் தான் கடும்தவம் செய்து ரிக்வேதங்களின் பல சம்ஹிதைகளை கண்டுணர்ந்தவர், ஏன் பிராம்மனர்கள் மிகவும்
புனிதமாக கருதும் காயத்ரி மந்திரத்தை வெளிபடுத்தியவர் அவரே. அவரை பிராம்மனராகவே ஏற்றுக்கொண்டு அவரின் வழிவந்த பரம்பரையை அதாவது கோத்திரத்தை கெளஸிக கோத்திரமென்றே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இதனால் பிறப்பால் ஒருவரின் வர்ணமுறை
ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சரி அடுத்து நமது தமிழ் திருமறையாம் திருக்குறளை எடுத்துக்கொள்வோம், 'அனைத்து உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான், ஆனால் அவை
செய்கின்ற தொழில்களால் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகள் இருப்பதால் அவற்றின் சிறப்பியல்புகள் ஒன்றாயிருப்பதில்லை' என்ற கருத்துடன் வரும் பின்வரும் பாடலை சற்று கவணியுங்கள்,

' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் ' - 972
இந்த ஒரு குறள் மட்டுமன்று குறள் 134,502,793,956,958,959,1019,1044 போன்ற குறட்பாக்களில் குறிப்பிடப்படும் குலம், குடி, இல் போன்ற சொற்கள் அனைத்தும் உயர்குலம் அல்லது உயர்சாதி என்றே பொருள்படும். குறளில் மட்டும்தானா சாதி அமைப்புகள்
சொல்லப்பட்டிருக்கின்றன தொல்காப்பியம், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் பார்ப்பான், வனிகன், வேளாளன், அரசன் போன்ற சாதி அமைப்பு சார்ந்த வார்த்தைகள் காணப்பட்டிருப்பதை வைத்து காணுங்கால் சாதிய அமைப்புகள் எங்கும் பரவி கிடந்ததை காணலாம் ஆனால் எந்தவொரு சாதி சண்டைகளும் நேரவில்லை என்பதை கவணிக்கவேண்டும். சரி அப்படியென்றால் எப்பொழுதுதான் இந்த சாதி வேறுபாடுகள் வந்தது அதாவது இவன் மேலானவன் இவன் கீழ்ச் சாதியைச் சார்ந்தவன் என்ற வேறுபாடுகள் வந்தது என்பதை நோக்குங்கால் நாம் 'மானவ தருமநூல்' என்னும் நூலிற்கு செல்லவேண்டும். என்னஇது புதிதாக ஒரு நூல் என்று நினைப்பீர்கள். வர்ணமுறைகளை விரிவு படுத்திய நூல் மநுஸ்மிருதியன்றோ என்றால் அதுவேறு இதுவேறு. மநுஸ்மிருதி கீதையையொட்டி ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள தொழில்முறைகளை பற்றி கூறுகிறது. ஆனால் மானவ தருமநூல் எனப்படும் நூல்தான் முதன்முதலாக பிரிவினையை உருவாக்கியது, சட்டமாக்கியது. இந்த நூல் யாரால் எழுதப்பட்டது என்றுசற்று கூர்ந்து நோக்குவோம். கி.பி. 5-ம்
நூற்றாண்டில் சாளுக்கிய பேரரசனான இரண்டாம் புலிகேசியின் அவையில் அரங்கேற்றம் செய்யப்பட்ட சட்டநூல்தான் இந்த மானவ தருமநூல். இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றால் இதோ,' It also appears highly certain that it was composed about 500 A.D., under the Chalukya soveriegn Pulikecci at Kalyanpuri, and that to the subsequent great extent and power of the west Caulkya dynasty it chiefly owes the wide and great repute it has held, and still holds, in the continent of India. '- The Ordinance of Manu, tr.Arthur Coke., ed., Edward E.Hopkins, 1892, introduction.சரி இந்த புத்தகத்திற்கும் இப்பொழுது நம்மிடம் நடக்கும் சாதி வேறுபாடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று சற்று பார்க்கலாம். வேங்கடம் முதல் குமரிவரை எங்கும் நிரவியிருந்த தமிழகத்தின் மீது முதன்முதலில் நிகழ்த்தப்பட்ட படையெடுப்பு களப்பிரர்களின் படையெடுப்பு அடுத்ததாக கன்னடத்திலிருந்து வந்த சாளுக்கியரின் படையெடுப்பு. இவர்கள் சேர,சோழ, பாண்டிய மன்னர்களுடன் நேருக்குநேர் நின்று வென்று வரலாறு படைத்தார்கள். கீழை சாளுக்கியத்தை ஆண்டுவந்த இராசேந்திரன் என்பவன், சோழமாமன்னன் வீரராசேந்திரன் இறந்தபிறகு அங்கு நிலவிய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, படையெடுத்து சோழ நாட்டை பிடித்தான். அவனே முதலாம் குலோத்துங்கன் என்னும் பட்டப்பெயர் அடைந்தான். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1070-1120. இந்த சாளுக்கிய மன்னன் தான் அரியனை ஏறும்போது சிற்ற்ரசர்கள்
அவனது திருவடிகளின் மீது அருகம்புல்லை வைத்து 'மனுநெறி தலையெடுக்கட்டும்' என்று அவனை வாழ்த்தினர் என்பதை கலிங்கத்து பரணியின் வரிகள் தெளிவுபடுத்துகின்றன, அவற்றை பார்ப்போம்," அறை கழல் அரசர் அப்பொழுது அடிமிசை அறுகு எடுத்திட மறையவர் முடி எடுத்தனர் மனுநெறி தலை எடுக்கவே"இதுமட்டுமின்றி இந்த மாமன்னனுக்கு வலப்புறத்தில் 98 சாதிகளும் இடதுபக்கத்தில் 98 சாதிகளை சார்ந்தவரை அமரச்செய்து வலங்கை, இடக்கை சாதியரென்றும் பிரித்து சாதி வேறுபாடுகளை ஏற்படுத்தியவன் இந்த குலோத்துங்க சோழன்தான் கண்ணன் அல்ல என்பதை இங்கு தெரியபடுத்துகிறேன். கண்ணன் ஏற்படுத்தியது நான்வகை அது எவ்வாறெல்லாம் மாறியது என்பதை இப்பொழுது புரிந்திருப்பீர்கள். போகட்டும் பின் எப்படி இத்தனை பிரிவுகள் வந்தது, அதை கூர்ந்து கவணிக்கவேண்டும். பாரதியாரின் காலத்தில் சூத்திரர்களில் 18 வகையும் நுளைழர்களில் 108 வகையும் இருந்தது என்று பாரதியாரே கூறுகிறார் தன்னுடைய கட்டுரை ஒன்றில். 'இங்கனம் ஜாதிக்கொள்கை வேரூன்றி கிடக்கும் இந்தநாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்துவம் என்னுங் கொள்கை நிலை நிறுத்துவதென்றால் அது சாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம், நுளை
நூற்றியெட்டாம். அதாவது பறையருக்குள்ளே 18 பகுதிகளும், நுளையர்களில் 108 வகைகளும் இருக்கின்றதாம். மேலும் பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள் ஒன்றுக்கொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது. கேலி,
கேலி பெருங்கேலி. இங்கனம் ஏற்கனவே பெருகிகிடக்கும் பிரிவுகள் போதாதென்று புதியபுதிய பிரிவுகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தம் வேண்டுமென்ற நல்ல நோக்க முடையவர்களிலே சிலர் செய்கை நெறியுணராமல் புதிய வகுப்புகள் ஏற்படுத்தி கொள்கிறார்கள்." எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். ஆனால் இப்பொழுது அரசே recognise செய்திருக்கும் பிரிவுகள் எத்தனை அதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.சரி இந்த சாதி அமைப்புகளையும் வேறுபாடுகளையும் வளர்த்தது யார்? அந்த கன்னட மன்னனனா, கண்ணனா? இனி நாம் செய்யவேண்டியது என்ன, அதையும் பாரதியாரே கூறுகிறார் " ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும், ஜனங்களை ஏமாற்றாமல்
விஷயத்தை சொல்லவேண்டும். கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் கோவில்கட்டி அதில் கல்லையோ ஒரு செம்பையோ நட்டு அங்கேதான் எல்லோரும் குமபிடவேண்டும் என்ற நியமம் எதற்காக? என்றால் ஜனங்களுக்குள் ஐக்கியம்
ஏற்படுவதற்காக தான். " மறுபடியும் சொல்கிறேன் கண்ணன் காட்டிய பாதை மிகவும் நல்ல பாதை அதை கடைபிடிப்போம்......மண்ணிக்கவும் சிறு விளக்கம் என்று ஆரம்பித்து மிகவும் பெரியதாக போய்விட்டது. Topic அந்த மாதிரி...... தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துக்களை
தெரிவியுங்கள் நான் மேற்கூறியவற்றில் பிழையிருப்பின் தெரியபடுத்துங்கள்.

7 Comments:

  • At 7:21 AM, Anonymous Anonymous said…

    This is all crap! When the society (and individual) has self respect and respects other as equal (irrespective of birth/profession) then only that society will be a good society.

    Person (like you) who spreads difference between individuals with profession (but indirectly/conscieously with birth) are only terrorists... There is not much difference between you and Bin Laden or Hindu terrorist Thogadias...

     
  • At 7:23 AM, Anonymous Anonymous said…

    Yep... I agree with the previous comment. I feel like vomitting after reading your posts aboout vedas and all...

     
  • At 8:19 AM, Blogger நற்கீரன் said…

    Tamil people always like to think or argue that caste system did not orginate from their social structure. You indicate otherwise.

    You seem to argue against caste based on birth, and argue for caste or class based on profession. Profession based class system is equally danagerous.

    It is important to reconize the essence of humanity in all of us.

    Yes, Indian gov does note the group of people who have been structurally discriminated against in order to help them. You will get a better explanation if you read the Amartya Sen's interview in the Front Line.

    When you allow mobility within a society, and achive more equality within society, the society in general prospers. That was the case with MiddleClass America; that is the case with Nordic countries today, and that will be the case of Middleclass India tomorrow.

     
  • At 10:27 AM, Blogger Narain Rajagopalan said…

    சிரிப்பு வருது, சிரிப்பு வருது
    சின்ன மனுஷன் செயலை பார்த்து
    சிரிப்பு வருது, சிரிப்பு வருது.

     
  • At 10:44 AM, Anonymous Anonymous said…

    3Vikrama! Please stop preaching/justifying old puranas which obviously spread hatred among human beings. Do you absolutely believe that differentiating people because of profession is the need of the hour. I agree with Nakkeran's comment. When the majority of the people adopt love marraiages(marryig someone just because you love her/him, not because of his/her caste, then only the society can advance. With evil minds like you, Indian people can never appreciate fellow Indians and will never creat better fellow generations. I pity your son/daughter to whom you are going to preach this evil thought.

     
  • At 10:47 AM, Anonymous Anonymous said…

    ---------------------------
    தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துக்களை
    தெரிவியுங்கள் நான் மேற்கூறியவற்றில் பிழையிருப்பின் தெரியபடுத்துங்கள்.

    ------------------------------
    m.mm.mm you pannadai.... Please stop now (talking all these bullshit), that would be a great service to fellow human being.

     
  • At 8:01 AM, Blogger ENNAR said…

    //கீழை சாளுக்கியத்தை ஆண்டுவந்த இராசேந்திரன் என்பவன், சோழமாமன்னன் வீரராசேந்திரன் இறந்தபிறகு அங்கு நிலவிய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, படையெடுத்து சோழ நாட்டை பிடித்தான். அவனே முதலாம் குலோத்துங்கன் என்னும் பட்டப்பெயர் அடைந்தான். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1070-1120. இந்த சாளுக்கிய மன்னன் தான் அரியனை ஏறும்போது சிற்றரசர்கள் அவனது திருவடிகளின் மீது அருகம்புல்லை வைத்து 'மனுநெறி தலையெடுக்கட்டும்' என்று அவனை வாழ்த்தினர் என்பதை கலிங்கத்து பரணியின் வரிகள் தெளிவுபடுத்துகின்றன, அவற்றை பார்ப்போம்," அறை கழல் அரசர் அப்பொழுது அடிமிசை அறுகு எடுத்திட மறையவர் முடி எடுத்தனர் மனுநெறி தலை எடுக்கவே"இதுமட்டுமின்றி இந்த மாமன்னனுக்கு வலப்புறத்தில் 98 சாதிகளும் இடதுபக்கத்தில் 98 சாதிகளை சார்ந்தவரை அமரச்செய்து வலங்கை, இடக்கை சாதியரென்றும் பிரித்து சாதி வேறுபாடுகளை ஏற்படுத்தியவன் இந்த குலோத்துங்க சோழன்தான் கண்ணன் அல்ல//

    தாங்கள் கூறுவது சரியில்லையே முதலாம் குலோத்துங்கள் படையெடுத்த சோழ நாட்டை பிடிக்கவில்லையே

    ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன் 1012-1044 வரை ஆட்சி செய்தான் இவனுக்குப்பிறகு
    இவனது மூத்தமகன் ராஜாதிராஜன் 1018-1054( இளவரசுபட்டமும் சேர்ந்து) பிறகு
    இரண்டாவது மகன் ராஜேந்திர சோழதேவன் 1051-1063 இளவரசு பட்டமும் சேர்ந்து) பிறகு
    ராஜேந்திரனின் பெயரன் அதாவது ராஜேந்திர சோழதேவனின் மகன் ஆதிராஜேந்திர சோழன் 1063-1070 வரையும்
    பிறகு வாரிசு இல்லாததால் ராஜேந்திர சோழன் மகளின் மகன் சந்திர குலத்துதித்த சாளுக்கிய அரசனாகிய இராசாராசனுக்கு மனைவியும் சூரிய குலத்து அரசனாகிய முதல் இராசேந்திர சோழன் என்னும் கங்கைகொண்ட சோழனுடைய மகளும் ஆன திருமகள் போன்ற அம்மங்கா தேவியின் மகனாவான் இவன். இவனை இவனது பாட்டி பார்த்தாள் அரசர்களுக்கு எல்லாம் அரசனாகு விளங்கும் தகுதியை அறிந்தாள் ;'என் மகள் வயிற்றுப் பிள்ளையாகிய இவன். எமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை வளர்த்து விளங்க வல்லவன் ஆவான்' என்று கூறி அவனைச் சுவீகாரம் கொண்டாள். இவன் தான் முதலாம் குலோத்துங்கள் (கோனேறி மேல்கொண்டான்)1070-1120

    எனக்கு வரலாறு படிக்கும் போது இந்த மேல்கொண்டான் என்பது பெண்வழிக்கு எப்படி வரும் என்ற ஐயப்பாடு இருந்தது பிறகு கலிங்கத்துப்பரணியைப் படித்துப்பார்த்த போது சுவீகாரம் எடுத்துக்கொண்டதால் அவனுக்கு இந்த பட்டம் பொருந்தும் என்பதை தெரிந்து கொண்டேன்.
    சாதியை உண்டாக்கியவன் முதலாம் குலோத்துங்கன் கிடையாது அவனுக்கு முன்னமே தான் பொன்னியின் செல்வனைப் படித்துப்பாருங்கள்.

     

Post a Comment

<< Home

 
Free Web Counters
Web Hit Counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது